பீட்டர் பாலின் தற்போதைய நிலையை குறித்து வனிதா வெளியிட்ட பதிவு.. விமர்சித்த ரசிகர்கள்!

நடிகை வனிதா மற்றும் அனிமேஷன் இயக்குநர் பீட்டர்பால் ஆகிய இருவரும் கடந்த ஜூன் 27ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். வனிதாவின் மூன்றாம் திருமணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை 19 வயதில் திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்னர், ஆந்திராவைச் சேர்ந்த ராஜன் ஆனந்த் என்பவரை 2007-ல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் திருமணமும் 2010-ல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பீட்டர் பால் என்பவரை வனிதா மூன்றாம் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் குறித்து பலரும் கருது தெரிவித்து வந்தனர். அதனை பொருட்படுத்தாமல் நடிகை வனிதா தனது யூடுப் பக்கத்தில் சமையல் விடியோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த நாளுக்கு முன் இரவு திடீரென பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

அதனை தொடர்ந்து ரசிகர்கள் பீட்டர் பால் விரைவில் குணமடைந்து விடுவார் கவலைப்படாதீங்க என ஆறுதல் கூறி வந்தனர். தற்போது வனிதா ஆல் இஸ் வெல். வீட்டுக்கு வந்தாச்சு என பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பீட்டர் பாலை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டீர்களா நல்லது என கூறிவருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.