இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், பெற்ற பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்து கொடுக்க விரும்பாமல் 9 ஏக்கர் நிலத்தை வளர்ப்பு நாய்க்கு எழுதி வைத்துள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டம் பதிபாபா என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நாராயண் வர்மா. இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். நாராயண் வர்மாவுக்கு 18 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் அவருக்கு தான் சேர்த்து வைத்த சொத்து எதையும் அவரது பிள்ளைகளுக்கு கொடுக்க விருப்பம் இல்லை.
பிள்ளைகளின் நடத்தைப் பிடிக்காததாலும், தனது பேச்சை அவர்கள் கேட்காததாலுமே தன்மீது பாசமாய் இருந்து சொன்ன பேச்சை கேட்கும் நாய்க்கு நிலத்தை எழுதி வைத்துள்ளார். அவருடைய விருப்பப்படி இரண்டு நாட்களுக்கு முன் அவரது சொத்துக்களை அவருடைய மனைவிக்கு 9 ஏக்கர் நிலமும், அவர் வளர்த்து நாய்க் 9 ஏக்கர் நிலமும் என சரிசமமாக பிரித்து எழுதி வைத்துள்ளார்.
அந்த நாயை சாகும்வரை பராமரிப்பவர்களுக்கு 9 ஏக்கர் நிலம் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து நாராயண் வர்மா கூறுகையில், நான் எனது பிள்ளைகளை நம்பவில்லை. அதனால் என்னுடைய மரணத்திற்கு பின் எனது மனைவிக்கும், வளர்ப்பு நாய்க்கும் சொத்து கிடைக்கும் வகையில் எழுதி வைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
Madhya Pradesh: A farmer has named his pet dog as legal heir of his ancestral property, in Chhindwara district.
“I own around 21 acres of land. I have divided the share of my property between my wife and my dog,” Om Narayan Verma says. pic.twitter.com/cbOVkos4iH
— ANI (@ANI) December 31, 2020