பிறந்தநாளில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு அடித்த அதிர்ஷ்டம்..! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! குவியும் வாழ்த்துக்கள்…

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாளத்தில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தலாம், தமிழ் திரையுலகம் மூலமாக தென்னிந்திய அளவில் பேசப்பட்டார். இதன்பின் தென்னிந்திய முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், மோகன்லால் விஜய், நாணி, விக்ரம், சூர்யா, பவன் கல்யாண், துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைத்து நடித்துவிட்டார்.

இவர் நடிப்பில் தற்போது குட் லக் சகி எனும் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இதுமட்டுமின்றி தெலுங்கில் நிந்தினுடன் இணைந்து ராங் டே எனும் படத்தின் நடித்து வருகிறார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதன் முறையாக கைகோர்த்து சிறுத்தை சிவா இயக்குனர் அண்ணாத்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து இதுவரை 7 வருடங்கள் ஆகின்றன.

இன்று தனது 28வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு, சப்ரைஸ் கொடுக்கும் வகையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், மகேஷ் பாபு நடித்து வரும் சர்கார் வாரி பாட்ட எனும் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.