பிரியங்காவை துஸ்பரோகம் செய்த கொடூரனின் அப்பாவுக்கு என்ன ஆனது? பரிதாபமான புகைப்படம் வெளியானது!

சமீபத்தில் டாக்டர் ப்ரியங்காவிற்கு நடந்த கொடூரமான சம்பவம் நமக்கு நன்கு அறிந்த ஒன்று தான். நாட்டில் பல துயரங்கள் இது போன்று நடந்தாலும், நம்மை மிகவும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம் இது தான். நாட்டையே உலுக்கிய சம்பவம் இது தான்.ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா வழக்கில் கைதான நான்கு கொடூரன்கள் கடந்த 6ஆம் போலீசாரால் தேதி என்சௌண்டேர் செய்யப்பட்டனர் .

இந்த நால்வரில் திருமணமான ஒரே நபர் சின்னகேசவலு என்பவன் தான். இவன் மனைவி ரேணுகா தற்போது கர்ப்பமாக உள்ளார், இந்நிலையில் சின்னகேசவலுவின் தந்தையும், ரேணுகாவின் மாமனாருமான குர்மன்னா சில தினங்களுக்கு முன்னர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவர் பின்னால் வேகமாக வந்த கார் பைக்கின் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த குர்மன்னா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நிசாம் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரின் உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ள போதிலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!