பிரபாஸ்- அனுஷ்கா திருமணம் குறித்து கேட்ட ரசிகர்..! தக்க பதில் கொடுத்து ட்விட்டரில் பதிவு!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழ் சினிமாவில் விஜய்யின் வேட்டைக்காரன், சூர்யாவின் சிங்கம், அஜித்தின் என்னை அறிந்தால் போன்ற பல்வேறு படங்களில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குறிப்பிட்ட சில கதைகளை அவர் தேர்தெடுத்து நடித்து வந்தாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் கொண்டுள்ளார்.

சினிமாவில் ஒரு ஜோடி நடித்த படம் ஹிட்டடித்து விட்டால் அவர்கள் நிஜத்தில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவது வழக்கம் தான். அப்படி சிலர் இணைந்துள்ளார்கள், அந்த லிஸ்டில் ரசிகர்கள் தெலுங்கு நடிகர் பிரபாஸ்-அனுஷ்கா ஷெட்டி இணைவார்கள் என்று எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் இருவருமே வெவ்வேறு வழியில் பயணித்து ரசிகர்கள் நினைப்பது கண்டிப்பாக நடக்காது என்பது போல் இருக்கின்றனர்.

அண்மையில் டுவிட்டரில் இணைந்த அனுஷ்கா ஷெட்டியிடம் ஒரு ரசிகர், பிரபாஸ்-அனுஷ்கா திருமணம் செய்வது போல் இடம்பெற்ற ஒரு படத்தின் காட்சியை பதிவு செய்து இதைப்பற்றி கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார். திருமணம் குறித்து கூறுவாரோ என ரசிகர் எதிர்ப்பார்த்தார், ஆனால் அனுஷ்கா அந்த காட்சி எடுக்கும் போது படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பதை கூறியுள்ளார். இதோ அவரது டுவிட்,

 

Leave a Reply

Your email address will not be published.