பிரபல பாடகர் எஸ்.பி.பிகாக கண்ணீர்விட்டு கதறி அழுத மனோ!! காண்போரை கண்கலங்க வைத்த காணொளி..

பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இவர் பாடாத மொழிகளே இல்லை. தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் எஸ்.பி.பி. இவர் ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர் நேற்று காலமானார். அதோடு ரஜினி, கமல், விஜய், அஜித், சல்மான் கான், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன் என இவர் இந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களுக்கும் பாடியுள்ளார்.

எம்.ஜி.ஆர் நடித்த படத்தில் ஆயிரம் நிலவே வா பாடல் இவரை எங்கேயோ கொண்டு சென்றது. நேற்று மதியம் 1.04 மணி அளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னணி பாடகர் எஸ்.பி.பி மரணமடைந்தார். இவரின் மறைவு இந்திய திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்காக கண்ணீர் வடித்தனர். அவருக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தான் இறுதி சடங்குகள் நடந்தன. காலை முதலே பிரபலங்கள் அந்த இடத்திற்கு வருவதும் எஸ்.பி.பி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுமாக இருக்கின்றனர்.

அவரது மகன் எஸ்.பி. சரண் தனது தந்தையின் காலடியில் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார். இந்த நிலையில் பாடகர் மனோ அவர்கள் எஸ்.பி.பியின் உடலை பார்த்து கதறி கதறி அழுதார். மனோ அழுததை பார்த்து பலரும் கண்ணீர்விட்டு அழுகின்றனர். இதோ அந்த வீடியோ,

Leave a Reply

Your email address will not be published.