தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து கலக்கியவர் நடிகை ஜெனிலியா. குழந்தை தனமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர் ஜெனிலியா. தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் என சில படங்களில் சுட்டி ஹீரோயினாக வலம் வந்தார். பின் ஹிந்தி சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் குடும்பம் குழந்தைகள் என முழு நேர குடும்ப பெண்ணாக இருந்து வந்தவர் அவ்வப்போது கணவருடன் படங்களில் தயாரிப்பு பணிகளை மட்டும் கவனித்து வந்தார். அண்மையில் மீண்டும் படத்தில் நடிக்க வந்துள்ளார். ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா சமீபத்தில் தி கபில் சர்மா என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது கிரிக்கெட் போட்டிகள் சமயத்தில் கிரிக்கெட் விரர்கள் சிலர் அவரை ஜெனிலியாவின் கணவர் என அழைத்து சற்று கோபமும் பொறாமையும் வெறுப்பாகவும் இருந்தது.
இதனால் அவர் இங்கே நான் ஜெனிலியாவின் கணவர் தான். மகாராஷ்டிராவில் ஜெனிலியா ரிதேஷின் மனைவி என கூறினாராம். இதனால் கிரிக்கெட் வீரர்கள் அவரை மகராஷ்டிராவில் மட்டும் தான் ரிதேஷின் மனைவி. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவில் ஜெனிலியாவின் கணவர் ரிதேஷ் தான் என நகைச்சுவையாக கூறியதாக நிகழ்ச்சியில் உண்மையை வெளிப்படுத்தினார் ரித்தேஷ்.