சீரியல், காமெடி, நடனம், பாடல், என பல வருடங்களாக மக்கள் மகிழ வைத்து வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ரசிகர்கள் மனதில் இருந்து இதுவரை நீங்காத நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்றால் கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம், கே.பி.ஒய் சாம்பியன்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை என பலவற்றை கூறி கொண்டே போகலாம்.

தற்போது மிக பிரபலமாக நல்ல வரவேற்பை பெற்று ஓடும் நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை. இந்த சீசனை மகபா மற்றும் அறந்தாங்கி நிஷா தொகுத்து வழங்க நடுவராக கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி உள்ளனர். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை சீசன் 2 நிகழ்ச்சியில் பிக் பாஸ் புகழ் ரம்யா கலந்து கொண்டுள்ளார். அவரின் கணவரான சத்யா தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகின்றார்.
இறுதியாக ஒளிபரப்பப்பட்ட மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் ரம்யாவுக்கு பல பரிசுகளை கொடுத்து அசத்தியுள்ளார். அது மாத்திரம் இன்றி, உணர்வுபூர்வமாக பேசி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார். ரம்யா அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். இந்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.