பிரபல நடிகை வெளியிட்ட தனது சிறுவயது புகைப்படம், யார்னு தெரியுதா?

ஆண்ட்ரியா ஒரு நடிகை, பின்னணி பாடகி மற்றும் இசைக்கலைஞர் ஆவார். அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத் துறைகளில் பணியாற்றுகிறார். ஒரு பின்னணி பாடகியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் கண்ட நாள் முதல் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நல்ல கதையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகை ஆண்ட்ரியா.

வித்தியாசமான கதை காலத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி, ரீமாசென், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர் அதிலும் முக்கியமாக இவரின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடித்த அணைத்து திரைப்படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். அந்த வகையில் இவர் நடித்த மங்காத்தா, பச்சை கிளி முத்துச்சரம், தரமணி, அவள், வடசென்னை போன்ற திரைப்படங்களில் இவரின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது.

மேலும் தற்போது தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்திலும் மற்றும் அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் நடித்துவருகிறார். அரண்மனை 1 படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்ட்ரியா தனது சிறுவயது புகைப்படத்துடன் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

 

 

View this post on Instagram

 

Then & now ?? #fringebenefits

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

Leave a Reply

Your email address will not be published.