சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியல் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் வாணிபோஜன். இவர் சிறு வயதிலிருந்தே மாடலிங்கில் இருந்து வந்துள்ளார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் இவர் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நயன்தாரா சாயலில் இருப்பதால் இவரை சின்னத்திரை லேடி சூப்பர் ஸ்டார் என்றும் மக்கள் அழைப்பர். சீரியல் நடிகை வாணி போஜன் தமிழில் நடித்து பாரிய வெற்றி பெற்ற படம் ஓ மை கடவுளே.

அதனைத் தொடர்ந்து வைபவ், வெங்கட் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் லாக்கப் படத்திலும் நாயகியாக நடித்துள்ளார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வைபவ்வுடன் நெருக்கமான படுக்கையறை காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த படம் விரைவில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து சூர்யா தயாரிப்பில் ஒரே நேரத்தில் 2 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இப்படி கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ள வாணிபோஜனுக்கு மீண்டும் ஒரு நடிகரின் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் வாரிசு நடிகரும் சிவாஜி கணேசன் பேரனுமான விக்ரம்பிரபு நடிக்கும் அடுத்த படத்தில் வாணிபோஜன் தான் கதாநாயகி. மிக விரைவில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.