ரஜினியின் படையப்பா திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 30 ஆண்டுகளாகத் திரைத் துறையில் இருக்கும் ரம்யா கிருஷ்ணன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நாட்டியப் பேரொளி பத்மினிக்குப் பிறகு, நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியாகக் கதாநாயகியாக நடித்த, நடித்து வரும் நடிகை என்றும் ரம்யா கிருஷ்ணன் வரலாறூ படைத்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணன் தனது 15 வயதிலே சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். வெள்ளை மனசு என்னும் திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரனுடன் நடித்தார். தற்போது தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக நடிகை ரம்யா கிருஷ்ணன் இருக்கிறார். படையப்பா படத்திற்கு அடுத்தப் படியாக இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தில் உள்ள இவரது ராஜமாத கதாபத்திரம் இவரை இந்திய அளவில் பிரபலமாகியது.
அதனை தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் குயின் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் தனது கணவர் கிருஷ்ணா வம்சி அவர்களின் பிறந்தநாள் என்பதால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்முறை அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.