கீர்த்தி சுரேஷ் ஒரு இந்திய திரைப்பட நடிகை, அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். மகாநதி என்ற வாழ்க்கை வரலாற்றில் நடிகை சாவித்ரியை சித்தரித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார். கீர்த்தி தயாரிப்பாளர் ஜி.சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள். தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் தமிழில் சினிமாவில் 5 ஆண்டுகளில் உயர்ந்த நிலைக்கும் வந்த நடிகைகளுள் ஒருவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இது என்ன மாயம் என்ற படத்தில் ஆரம்பித்து ரஜினி முருகன், ரெமோ படத்தின் மூலம் ஹிட் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதையடுத்து தளபதி விஜய்யின் பைரவா, சர்கார், விகரமின் சாமி 2 போன்ற முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஓடிடியில் வெளியான பென்குயின் திரைப்படம் கலந்த விமர்சனங்களை பெற்று தந்தது.
இந்நிலையில் இவரது மூத்த சகோதரியை யாரும் அடையாளம் காணப்பட்டத்தில். இவரது அக்காவின் பெயர் ரேவதி சுரேஷ். கடந்த 2016 நித்தின் மோகன் என்பவருடன் திருமணமும் நடைபெற்றது. அப்போது கீர்த்தி சுரேஷ் வளர்ந்து வரும் நடிகையாக இருந்ததால் மலையாள சினிமாவில் மட்டும் பெரிதாக எடுக்கப்பட்டது. தற்போது கீர்த்தி சுரேஷின் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகிறது.