பிரபல நடிகையுடன் ஹரிஷ் கல்யாண் காதலா? ட்விட்டரில் வெளியான அதிகாரபூர்வ தகவல்..

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். அதிக பெண் ரசிகர்களைக் கொண்ட இளம் நடிகர் இவர் தான். இவர், ப்யார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை தொடர்ந்து அவரது ரசிகைகள் கூட்டம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஹரிஷ் கல்யாண் நடிகை ப்ரியா பவானி சங்கருடன் இணையந்து, தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற “பெல்லி சூபுளு” என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இந்நிலையில், தற்போது ட்விட்டர் பக்கத்தில் ஹரிஷ் கல்யாண் இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ‘பைனலி, ஹாப்பி பார் அஸ்’ என பதிவிட்டு ஹார்ட் சிம்பிளையும் இணைத்துள்ளார்.

இந்த ட்விட்டருக்கு ப்ரியா பவானி சங்கர், “உன்னால் லாக்டவுன் முடியுற வரை காத்திருக்க முடியாதுல என கோபத்துடன் ரிப்பளை கொடுத்துள்ளார். அதற்கு, ஹரிஷ் கல்யாணும், “காத்திருக்கமுடியாது, காத்திருக்க வேண்டாம், நான் அதிகாரப்பூர்வமாக நாளை மாலை 5 மணிக்கு அறிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளனர். பல கமெண்ட்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.