பிரபல நடிகையுடன் பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணமாம்..! அந்த நடிகை யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகும். பிக் பாஸ்ஸின் மூன்று சீசன்களையும் தொகுத்து வழங்கியவர் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனுக்கு வராத பிரச்சனைகளே இல்லை. மக்களாலும் நிகழ்ச்சி பரபரப்பாக பார்க்கப்பட்டது. ஓவியா-ஆரவ் காதல், பரணி செய்த விஷயம், ஜுலியின் அட்ராசிட்டி என நிகழ்ச்சி முழுவதும் ஒரே பரபரப்பு தான்.

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு முதல் பரிசை தட்டிச்சென்றார் ஆரவ். அந்த சீசனிலேயே நடிகை ஓவியாவுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்கினார், இதனால் அப்செட்டான ஓவியா பிக்பாஸை விட்டு பாதியிலேயே வெளியேறினார். முதல் சீசனை தொடர்ந்து 3 சீசன்கள் ஒளிபரப்பானது, 4வது சீசன் எப்போது என்று தெரியவில்லை.

இந்த நிலையில் முதல் சீசன் வெற்றியாளர் ஆரவ்வின் திருமணம் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஜோஷ்வா இமை போல் காக்க படம் மூலம் நடிகையாகும் ராஹீ என்பவரை தான் ஆரவ் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம். அதாவது ஆரவ்விற்கும், நடிகை ராஹே என்பவருக்கும் செப்டம்பர் 6ம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!