பிரபல நடிகையின் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்

சமீபத்தில், திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில், மற்றொரு நடிகர் மன அழுத்தம் காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுவதால். பிரபல திரைப்பட நடிகையின் கணவரும், நடிகருமான அஸ்துஷ் பக்ரே வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மராத்தி நடிகையான மயூரிக்கும் அஸ்துஷ் பக்ரேக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், சம்பவ தினத்தன்று, புதன் கிழமை பிற்பகல் அஸ்துஷ் பக்ரே மாடிக்கு சென்று தூங்குவதாக தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் கீழே வராததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவர் அறையின் கதவை தட்டியுள்ளனர். கதவு உள் பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், அறையின் ஜன்னல் கதவின் வழியே எட்டிப் பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது வரை அவர் இறப்பிற்கான காரணம் சரியாக தெரியவில்லை, ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர் மன அழுத்ததில் இருந்ததாக கூறப்படுகிறது. க்ஹுல்ட்டா காளி க்ஹுளென என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அவரது மனைவி மயூரி தேஷ்முக் மிகவும் பிரபலம் ஆனார்.

Leave a Reply

Your email address will not be published.