பிரபல நடிகர் வலிமை படத்தில் தல அஜித்துக்கு தம்பியாக நடிக்கிறார்!! புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தல அஜித். இவரின் படம் ரிலீஸ் ஆனாலே தியேட்டர் முழுவதும் திருவிழா கோலமாகும். தமிழ் திரையுலகில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படம் நடிகர் தல அஜித். இன்றுவரை, அஜித் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளிவந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர் தல அஜித். இவர் நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் அஜித்துக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரானா காரணமாக தள்ளிப்போய்வுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சினிமா படப்பிடிப்புகள் துவங்கலாம் என அரசு உத்தரவின் கீழ் கூடிய விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்தின் தம்பியா பிரபலம் ராஜ் அய்யப்பா என்பவர் நடிக்க இருக்கிறாராம் என்று தற்போது சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.