பிரபல நடிகர் ராணாவுக்கு கல்யாணம்..! முக்கிய பிரபலம் கலந்து கொள்ள முடியாமல் போனது..!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் ராணா டகுபதி. இவர் ஒரு இந்திய நடிகர், தயாரிப்பாளர் மற்றும் ஒரு தொழில்முனைவோர் ஆவார். பாகுபலி படத்தின் மூலம் பிரபலமானவர் ராணா டகுபதி. சினிமா வாரிசான இவரும் அம்மொழியில் பல படங்களில் நடித்து வந்தார். மேலும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் துறையில் 70 படங்களில் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

அண்மையில் அவருக்கு டிசைனராக பணியாற்றி வந்த மிஹிகா என்ற பெண்ணுடன் அவருக்கு திருமணம் பேசப்பட்டது. கொரோனாவால் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது போல திருமணமும் நடத்தப்படவுள்ளதாம். நாளை மறுநாள் இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் இருக்கும் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறவதாக இருந்தது. ஆனால் கொரோனா, பாதுகாப்பு போன்ற காரணங்கள் கருதி அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான ராமாநாயுடு ஸ்ரூடியோஸில் நடத்தப்பட்டவுள்ளதாம்.

இதற்கான ஸ்டூடியோவில் அலங்கார வேலைகள் நடைபெறுகிறதாம். ஒரு வாரம் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறதாம். மிக முக்கியமானவர்கள் மட்டும் பங்கு பெறும் இந்த நிகழ்வில் இயக்குனர் ராஜ மௌலி கலந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கிறாராம். தமிழ் சினிமாவில் யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லையாம். ராஜமௌலிக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.