பிரபல நடிகர் ராணாவுக்கு கல்யாணம் முடிஞ்சாச்சு..! வைரலாகும் கல்யாணப் புகைப்படம்…!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் ராணா டகுபதி. மேலும் தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் துறையில் 70 படங்களில் விஷுவல் எஃபெக்ட்ஸ் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ளார். அண்மையில் அவருக்கு டிசைனராக பணியாற்றி வந்த மிஹிகா என்ற பெண்ணுடன் அவருக்கு திருமணம் பேசப்பட்டது. கொரோனாவால் மிக எளிமையாக நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.

பாகுபலியில் பல்வாள்தேவனாக மிரட்டிய நடிகர் ராணா டகுபதி, தன்னுடைய தேவசேனாவை நேற்று கரம் பிடித்தார். நட்சத்திர குடும்ப திருமணம் என்பதால், திருமணத்திற்கு வந்த 30 பேரில் பலரும் திரை நட்சத்திரங்களாகவே மின்னினர். டோலிவுட்டின் முன்னணி நடிகர்களான ராம்சரண், அல்லு அர்ஜுன், நாக சைதன்யா மற்றும் சமந்தா உள்ளிட்டோர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவல் காரணமாக இந்தியளவில் திரை நட்சத்திரங்களையும், ரசிகர்களையும் அழைத்து நடத்தி இருக்க வேண்டிய ராணா – மிஹீகா திருமணம், குறைந்த ஆட்களை கொண்டு, கோலாகலமாக களைகட்டியது. மிஹீகா பஜாஜுக்கு தாலி கட்டிய ராணா அவருக்கு மோதிரம் போடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ராணாவின் திருமண க்ரூப் போட்டோ வெளியாகி செம வைரலாகி வருகிறது. நடிகை சமந்தா வெளியிட்ட அந்த புகைப்படத்தில், ஏதோ சின்ன பொண்ணு போல கீழ் வரிசையில் அழகாக அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!