பிரபல நட்சத்திரங்கள் பாபி சிம்ஹா-ரேஷ்மாவின் அழகிய குழந்தைகளை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் குடும்ப புகைப்படம்..

காதலில் சொதப்புவது எப்படி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பாபி சிம்ஹா. அதன் பின்னர் பிட்சா, நான் ராஜாவாக போகிறேன், சூது கவ்வும், நேரம், ஜிகிர்தண்டா போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார். பாபி சிம்ஹா, தமிழ் சினிமாவில் நுழைந்த சில காலங்களிலேயே நடிப்பில் அசத்தி மக்களை கவர்ந்தவர்.

சில படங்களே நடித்தாலும் பிலிம்பேர், தேசிய விருது, மாநில விருது என விருதுகளாக குவித்துள்ளார். 2012ல் சினிமா பயணத்தை தொடங்கியவர் அதற்கு முன் குறும்படங்கள் நிறைய நடித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு வெள்ள ராஜா என்ற வெப் சீரிசிலும் நடித்துள்ளார். வல்லவனுக்கு வல்லவன் மற்றும் இந்தியன் 2 படங்களில் தற்போது நடித்து வருகிறார். கொரோனா தோற்று காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கபட்டுள்ளது.

2016ம் ஆண்டு நடிகை ரேஷ்மா மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரேஷ்மா மேனன் இனிது இனிது படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பாபி சிம்ஹா ரேஷ்மா ஜோடிக்கு ஒரு பெண், ஆண் குழந்தை உள்ளது. தற்போது இவரின் குடும்பத்தின் அழகிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *