பிரபல நடிகர் படத்தை பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை படைத்துள்ளது தளபதியின் பீகிள் திரைப்படம்.

இந்த தீபாவளிக்கு நடிகர் விஜய் நடிப்பில் ஸ்பெஷலாக வெளியான பிகில் படம் வசூல் அளவில் பல முன்னேற்றங்களை கண்டு வருகிறது. நடிகர் விஜய், நயன்தாரா, யோகி பாபு மற்றும் பலர் நடித்த பீகிள் படம் அனைவருக்கும் பிடித்த படமாக அமைந்தது. மேலும் இந்த படம் வசூல் மழையும் பொழிந்துள்ளது.

அதாவது 5 நாட்களில் ரூ 200 கோடி வசூலை தாண்டிய இப்படம் தற்போது 7 நாட்களை கடந்து விட்ட நிலையில் வசூல் ரூ 220.3 கோடியை எட்டியுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாண்டு ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் வசூலை பிகில் படம் 6 நாட்களில் தற்போது முந்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

பிகில்

இந்தியா – ரூ 145 கோடி
தமிழ்நாடு – ரூ 99 கோடி
உலகளவில் – ரூ 210+ கோடி

பேட்ட

தமிழ்நாடு & இந்தியா – ரூ 140 கோடி
ஓவர் சீஸ் – ரூ 71 கோடி
உலகளவில் – ரூ 211 கோடி


இந்நிலையில் பிகில் படம் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் ரூ 265 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவாளி தற்போது பல முன்னணி பிரபலங்களின் படங்கள் பல வசூல் சாதனைகள் படைப்பது வாடிக்கையாகிவிட்டது என்று தான் கூறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!