பிரபல நடிகர் பசுபதியின் மனைவி இவங்கதானா! – இவருக்கு இவ்வளவு அழகான மகளா !! ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் பல நடிகர் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் போன நிலையில் குணசித்திர வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்கள் சில பேர்தான். அந்த வகையில் திரையுலகில் சிறு கதாபாத்திரங்களின் மூலம் நடித்து அதன் பின் வில்லன் கதாபாத்திரங்களில் இதை தொடர்ந்து பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து தற்போது கதாநாயகனா இருப்பவர் பசுபதி மாசிலாமணி. 53-வயதான இவர் ஆரம்பத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னையை சேர்ந்த கூத்து பி பட்டராய் எனும் நாடக குழுவில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இதன் மூலம் பிரபலமான இவர் பிரபல திரைபட நடிகரான நாசர் அவர்களின் நட்பை பெற்று திரைப்படங்களில் அறிமுகமானார்.

இதுவரை இவர் நடித்திராத கதாபாத்திரங்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு வில்லன், நகைச்சுவை,துணை நடிகர்,க தாநாயகன் என அணைத்து கேரக்டரிலும் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பிரபலமாக உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமான இவர் தற்போது எந்த கதாபாத்திரம் என்றாலும் ஏற்று நடித்து வருகிறார்.

இவர் உலகநாயகன் கமல் அவர்களுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விருமாண்டி திரைப்படத்தில் இவரது நடிப்பு பலரால் பாரட்டபட்டதோடு இவருக்கு சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை பெற்று தந்தது. வெயில், சுள்ளான், அசுரன், தூள், மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற பல படங்களில் பல முன்னை நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

மேலும் கேசலன் படத்தில் கதாநாயகனாக இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று தந்தது. இவ்வாறு சினமா உலகில் பன்முக திறமையால் பிரபலமாக இருக்கும் பசுபதி தற்போதும் பல முன்னணி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பசுபதி அவர்களின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராளாகி வருகிறது.பசுபதி அவர்கள் சூர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் இவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களை ஆச்சர்யபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.