பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகனவர் நடிகர் நகுல். 2003ஆம் ஆண்டு முன்னனி இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் வெற்றியும் பெற்றது. நகுல் பிரபல நடிகை தேவயானியின் தம்பி ஆவார். அடுத்ததாக 2008ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
மேலும் தனது 35-வது பிறந்தநாளன்று தன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார். இந்நிலையில் நகுல் – ஸ்ருதி தம்பதினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு திறைதுறையை சார்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அண்மையில் நடிகர் நகுலுக்கும் அவரது மனைவி ஸ்ருதிக்கும் பெண் குழந்தை பிறந்ததாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் தனது மகளுடன் எடுத்து கொண்டு ரீசன்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், இப்படி ஒரு இளவரசியை கொடுத்ததற்காக தனது மனைவி ஸ்ருதிக்கும் நன்றி தெரிவித்து எமோஷனலாக பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படத்தினை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.