பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தன்னுடைய கடந்த ஜூன் 14ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் தொலைக்காட்சி சீரியல்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழில் சினிமாவில் சுஷாந்த் சிங் ராஜ்புத், எம்.எஸ்.தோனி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்நிலையில் சுஷாந்தின் மரணத்திற்கு அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தமே காரணம் என கூறப்படுகிறது.

பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியல்தான் அவரது மன அழுத்தம் மற்றும் மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்கொலைக்கான உண்மை காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகாரில் அமைந்துள்ள சுஷாந்தின் சொந்த ஊரான புர்னியாவில் இருக்கும் ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங்கின் பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மதுபானி முதல் மட்டா சவுக் வரை இருக்கும் சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் சாலை என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு அமைந்துள்ள போர்டு நிறுவனத்தின் ரவுண்டானாவிற்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் ரவுண்டானா என பெயர் மாற்றப்பட்டு உள்ளது. சமீபத்தில் பெயர் மாற்றப்பட்ட சாலையை திறந்து வைத்துள்ளனர். இதுகுறித்து புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.