கொரோனா தொற்று காரணமாக உலகெங்கும் பல்வேறு இடங்களில் லாக்டவுன் போடப்பட்டிருந்தது. அதனால் அனைவரது இயல்பு வாழ்க்கையும் மாறியது. சினிமா ஷூட்டிங் அனைத்திற்கும் தடை விதிக்க பட்டிருந்தது. தற்போது ஒரு சில தளர்வுகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. தற்போது வரை திரையரங்குகள் திறக்காமல் இருக்கும் பட்சத்தில், எந்த ஒரு திரைப்படமும் வெளிவர இயலவில்லை.
ஆனால் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின், வரலட்சுமி சரத்குமாரின் டேனி, வைபவ் நடித்த லாக்கப் உள்ளிட்ட படங்கள் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகின. அடுத்ததாக சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் வருகிற அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடி யில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர். இந்நிலையில் சில படங்கள் ஓடிடி யில் வெளியாக உள்ளன. அந்த வகையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டாக்டர்’ படத்தையும் ஓடிடி யில் வெளியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்சன் இயக்கி உள்ள இப்படத்தை கே.ஜெ.ஆர். ஸ்டுடியோசுடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்சன்ஸ் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைத்துள்ளார், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பிரியங்கா தமிழில் அறிமுக நாயகியாக நடித்துள்ளார்.