சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது நடிப்பால் ரசிக்க வைத்தவர் சிவகார்த்திகேயன். தொலைகாட்சியில் மிமிக்கிரி கலைஞராக இருந்து, அதன்பின் நிகழ்ச்சி தொகுப்பாளராகி தற்போது தமிழ் திரையுலகில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ஒரு திரைப்பட நடிகர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.

எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தனது தனித் திறமையால், தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். இவர் தற்போது இளம் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் எனும் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இப்படத்தில் முதல் பாடல் செல்லமா வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இப்படத்தை போல் ரவிகுமார் இயக்கத்தில் சைன்ட்டபிக் படமான அயலான் படத்திலும் நடிகை ரகுல் பீர்த் சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக மற்றும் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக பார்த்திருப்போம், ஆனால் அவர் வீட்டில் எப்படி இருப்பார், அவர் வீடு எப்படி இருக்கும் என்று நாம் யாராவது பார்த்திருப்போமா. இதோ அவரின் பிரமாண்ட வீட்டின் முழு புகைப்படங்கள்…