தமிழில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பில் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் கார்த்தி. தமிழ் நடிகர் சிவகுமாரின் மகன் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் தம்பி ஆவார். பருத்திவீரன் படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, பையா, கோ, சகுனி, மெட்ராஸ் போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு உதவி புரிந்து வருகிறார் நடிகர் கார்த்தி. தற்போது தீரன் அதிகாரம் ஒன்று, தம்பி, கைதி என மிக சிறந்த படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கார்த்தி. இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படமும் பல சிறந்த பரிமாணங்களில் உள்ளன, அதை நாம் படம் பார்க்கும் பொழுது அறிந்து கொள்வோம்.
தற்போது கார்த்தி ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் இயக்கத்தில் சுல்தான் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக்கின் திரையுலக வாழ்வை பற்றி நமக்கு தெரியும், ஆனால் இவரின் பிரமாண்ட வீட்டை இதுவரை நாம் பார்த்ததில்லை, இதோ கிளாசான புகைப்படங்களுடன்..