பிரபல நடிகர் ஆர்யாவின் வீட்டை பார்த்துள்ளீர்களா? எவ்வளவு பிரமாண்டம்.. புகைப்படங்கள் இதோ!

அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகர் ஆர்யா. தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றம் கனடா மொழிகளிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் பாலா இயக்கிய நான் கடவுள் படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த ராஜா ராணி, வேட்டை, பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசபட்டினம் உள்ளிட்ட படங்களை நம்மால் மறந்துவிட முடியாது.

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பாலும், சிறந்த நடிப்பாலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் நடிகர் ஆர்யா. தனது எதார்த்தமான மற்றும் கலகலப்பான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் படலத்தை பெற்றார் நடிகர் ஆர்யா. மேலும் தற்போது டெடி மற்றும் சல்பெட்டா ஆகிய திரைப்படங்களின் வருகைக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சமீபத்தில் தான் வனமகன் மற்றும் ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இளம் நடிகை சயிஷாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகர் ஆர்யா தற்போது வரை வசித்து வரும் வீட்டின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதனை இங்கு தொகுத்து வழங்கி இருக்கிறோம். இதோ நடிகர் ஆர்யாவின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *