பிரபல நடிகர்களை தொடர்ந்து நடிகர் விவேக்கிடம் திமிர் காட்டிய மீராமிதுன்… கொந்தளிக்கும் ரசிகர்கள்…

மாடல் அழகியான மீரா மிதுன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக திகழ்ந்து வரும் விஜய் மற்றும் சூர்யா குறித்து அவதூறாக பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அந்த வீடியோக்கள் பெரும் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் மரக்கன்றை நட்டு, பாபு விஜய்க்கு மரக்கன்று நட சவால் விட்டிருந்தார்.

இந்த சவாலை ஏற்று விஜய் தனது வீட்டில் மரக்கன்றுகளை நட்டு அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் வைரலாக பரவியது, ஆனால் வழக்கம்போல மீராமிதுன் விஜய்யின் இந்த பதிவையும் கேலி செய்து இருந்தார். எப்படி மரக்கன்றை நட வேண்டும் என்று விவேக் சாரிடம் கத்துக்கொள்ளுங்கள் என்று கேலியாக கூறியிருந்தார். இந்நிலையில் மீரா மிதுனுக்கு நேரடியாக விவேக் ட்வீட் செய்துள்ளார்.

அதில், மீரா மிதுன், நீங்கள் பதிவிட்டுள்ள விஷயம் லட்சக்கணக்கான விஜய் ரசிகர்களின் உணர்வை காயப் படுத்துவதாக இருக்கிறது. நீங்கள் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டு விஜய் மற்றும் மகேஷ்பாபுவின் அன்பை பெருங்கல். ஆனால், வழக்கம்போல தனது திமிரை காட்டியுள்ள மீரா மிதுன் ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்கும் மற்றவர்கள் விமர்சிக்க உரிமை இருக்கிறது. பிரபலங்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த விவேக் ரசிகர்கள் தற்போது கொந்தளித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.