பிரபல நடிகரை இரவில் ஹோட்டல் அறைக்கு அழைத்து ஒத்திகை பார்த்த நடிகை.. கண்ணத்தில் பளார் விட்ட நடிகர்..!

நடிகை அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் மைனா. இந்த படத்தில் பொலிஸ் அதிகாரியான சேதுவிற்கு மனைவியாக நடித்திருந்த சூசன். சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சூசன் தற்போது தொட்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சூசன் மனைவியாகவும் வில்லனாக எம்.எஸ்.குமார் நடிக்கிறார். இந்த படத்தின் ஒரு காட்சியில் சூசனை, குமார் கண்ணத்தில் அறைவிடும் காட்சி ஒன்று வருமாம்.

ஆனால், அந்த குமார் மிகவும் சாப்டான நடிகர் என்பதால் சுசான் கன்னத்தில் அறைய தயங்கினாராம். ஆனால் இந்த காட்சியை படமாக்கியே தீர வேண்டும் என எண்ணிய சூசன், குமாரை இரவு 10 மணிக்கு மேல் தனது ஓட்டலுக்கு வர சொல்லியுள்ளார். குமாரும் ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு சூசன், தன்னை அடித்து பழகுங்கள்,அப்போ தான் நீங்கள் இந்த அறையை விட்டு சொல்ல முடியும் என கூறியுள்ளார்.

எதற்கும் மசியாத குமார், சில பல வாக்குவாதங்களுக்கு பிறகு சூசனை ஓங்கி அறைந்துள்ளார். அறை வாங்கிய பின்னரும் கூட வலியையும் பொருட்படுத்தாமல், குட்…நாளைக்கும் இப்படிதான் ஷூட்டிங்கில் என்னை அரைய வேண்டும் என்று கூறியுள்ளார் சூசன்.

ஆனால், இவ்வளவு கஷ்டப்படும் அடுத்த நாள் ஷூட்டிங்கில் குமார், சூசனை சரியாக அறையவில்லையாம். இதனால் இத்தனை ஒத்திகை பார்த்தும் நினைத்தபடி ஷாட் ஒழுங்காக வரவில்லையே என்று வருத்தப்பட்டாராம் சூசன்.

Leave a Reply

Your email address will not be published.