கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இவருக்கு சுந்தரபாண்டியன் தான் முதல்படம். ஆனால் அதற்கு முன்பே கும்கி வந்துவிட்டது. சுந்தரபாண்டியனிலும் கோபக்கார பெண்ணாக அழகாக நடித்திருப்பார். விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்த கும்கி படம் இவருக்கு வெற்றிகரமான படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து ஜிகிர்தண்டா, வேதாளம் என பல படங்களிலும் நல்ல நடிப்பைக் கொடுத்திருந்தார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் கொஞ்சம் குண்டாக இருக்கும் நாயகிகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அந்தவகையில் லட்சுமி மேனனுக்கும் தமிழில் ரசிகர்கள் அதிகம். நடிகை லட்சுமி மேனன் பிக்பாஸ் சீசன் 4 ல் கலந்துகொள்ளப்போகிறார் என தகவல் சுற்றி வர அவரே நான் அது போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளபோவதில்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கும் அவர் பட்டப்படிப்பையும் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் விக்ரம் பிரபுடன் ஜோடியாக மீண்டும் புதிய படத்தில் இணைந்துள்ளாராம். கொம்பன் படத்தை இயக்கி முத்தையா இப்படத்தை இயக்க சன் டிவி நிறுவத்துடன் இணைந்துள்ளனராம். இதற்கான பட பூஜை இன்று நடைபெற்றுள்ளது. கும்கி படத்தில் ஏற்கனவே விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ஜோடி மீண்டும் இணைந்துள்ளனர்.