பிரபல நடிகருக்கு ஜோடியாகும் இறுதிச்சுற்று நடிகை ரித்திகா சிங்… அந்த பிரபலம் யார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடிப்பவர் ரித்திகா சிங். தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்து வெளிவந்த இறுதி சுற்று படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ரித்திகா சிங். அதன் பின்னர் பல படங்களில் நடிக்க கமிட் ஆனார். இதன்பின் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸின் சிவா லிங்கா ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

ஹிந்தி (சாலா கதூஸ்), தமிழ் ( இறுதிச் சுற்று ) மற்றும் தெலுங்கு (குரு) ஆகிய மூன்று மொழிகளிலும் ஒரே கதாபாத்திரத்தில் நடித்து ஃபிலிம்ஃபேர் விருதுகளை மூன்று முறை பெற்றார். சமீபத்தில் அசோக் செல்வன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே எனும் படத்திலும் நடித்து பிரபலமானார் ரித்திகா. இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி அடையலைத்தைப் பெற்றார்.

சமூக வலைதளங்களில் கூட மிகவும் ஆட்டிவாக இருந்து வரும் நடிகை ரித்திகா அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தின் கதாநாயகியாக கமிட்டாகிவுள்ளராம். மேலும் சமீபத்தில் தனது பிறந்தநாள் அன்று தான் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார் விஜய் ஆண்டனி.

Leave a Reply

Your email address will not be published.