உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் ஏராளமானோர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சினிமா துணைநடிகர்கள் வாழ்வாதாரம் இன்றி முடங்கியுள்ளனர்.
நடிகர் பாக்யராஜியின் தூறல் நின்னுப் போச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சூரியகாந்த், சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சிரமப்படுவதக தெரிவித்துள்ளார். இதுகுறித்து சூர்யாகாந்த் கூறுகையில், பாக்யராஜ் தான் ‘தூரல் நின்னு போச்சு’ படத்தில் என்னை அறிமுகப்படுத்தினார். பாரதிராஜாவின் மண்வாசனை, கிழக்குச் சீமையிலே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறேன். கடைசியாக கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்தேன்.
தற்போது திரைப்பட படப்பிடிப்புகளும் இல்லை. சின்னத்திரை படப்பிடிப்புகளும் சரியாக நடக்கவில்லை. அதனால் பொருளாதார ரீதியாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஒரு மாதத்துக்கு மருந்து மாத்திரை வாங்கவே ரூ.1500 செலவாகிறது. அதை வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. சாப்பாட்டுக்க வழியில்லாமல் இருக்கிறேன். தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.