பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மருத்துவனையில் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு சீசனின் மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர். தன பின்னர் அது இது எது, மிஸ்டர் அண்ட் மிச்செஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் வடிவேலு பாலாஜி(42) . இவர் பந்தயம், யாருடா மகேஷ், கோலமாவு கோகிலா, சுட்டபழம் சுடாத பழம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவரின் நகைச்சுவை திறமைக்கு என பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

திரைப்படங்களிலும் காமெடி நடிகராக நடித்து வந்த வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதம் ஏற்பட்டு முடங்கி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வடிவேல் பாலாஜி உயிர் பிரிந்தது.

மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த வடிவேலு பாலாஜிக்கு 1 மகனும், 1 மகளும் உள்ளனர். அவரின் திடீர் மறைவு சக நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவருடன் பணியாற்றிய ராமர், நாஞ்சில் விஜயன், தங்கதுரை, மா கா பா, என் பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.