பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் பணிமலரின் லீக்கான வீடியோ! வைரல் மேட்டரின் உண்மை பின்னணி!

கோவையை சேர்ந்த பனிமலர் கடந்த பத்து ஆண்டுகளாக ஊடகத்துறையில் உள்ளார். சன் தொலைக்காட்சியில் தனது பணியை தொடங்கிய அவர் பின்னர் பாலிமர், புதிய தலைமுறை, நியுஸ் செவன் என பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி உள்ளார். தற்போது நியுஸ் செவன் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராக உள்ளார். இது தவிர இவர் பெண்களுக்கான தங்கும் விடுதி பிசினசிலும் சில காலம் இருந்தார். பெரியார் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டவர். திருமணமாகி கணவனுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்தும் பெற்றுள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலமாக விளங்கும் பனிமலர் பேஸ்புக்கில் போடும் பதிவுகள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துபவை.

அந்த வகையில் மகாசிவராத்திரி அன்று கோவை ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரியை கிண்டல் செய்து பனிமலர் சில போஸ்ட்டுகளை போட்டிருந்தார். மேலும் ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி சிலையின் முகத்தை வடிவேலு முகமாக மாற்றி பனிமலர் வெளியிட்டிருந்த புகைப்படம் வைரல் ஆனது. பனிமலரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தான் பனிமலரின் ஆபாச வீடியோ வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என பனிமலரின் வீடியோவை பலரும் தேடி வருகின்றனர். ஆனால் யாருக்கும் அந்த வீடியோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் அப்படி ஒரு வீடியோ வெளியாகவே இல்லை என்கிற உண்மை தெரியவந்துள்ளது. ஆதியோகி சிலையின் முகத்தை வைத்து காமெடி செய்த பனிமலரை பழிவாங்க அவர் ஆபாச படம் வெளியாகியுள்ளதாகவும், அதற்கு பனிமலரே பதில் அளித்துள்ளதாகவும் கூறி மார்பிங் புகைப்படங்கள் பரவி வருகின்றன.

செய்திவாசிப்பாளர் பனிமலர் செய்தது தவறு என்று நினைத்தால் அவர் மீது புகார் அளித்து நடவடிக்கை எடுக்கச் செய்வது தான் சரி. மாறாக அவருடையை மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இதுபோன்ற தகவல்களை பரப்புவது சரியா? என பலரும் யோசிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!