பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விஜய்யின் மாஸ்டர் படம்! வெளியான தகவல்- குஷியில் ரசிகர்கள்..!

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வெற்றிப்பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்யுடன் முதன் முறையாக இணைந்துள்ளதால், இப்படத்தின் வெளியிட்டிற்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம்,கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

மேலும் திரையரங்குகள் அனைத்தை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என நம்பப் படுகிறது. படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா, நெய்வேலி என நடந்தது. படப்பிடிப்பு தளங்களில் விஜய்யை காண ரசிகர்கள் கூட்டம் கூடிய வீடியோக்கள், புகைப்படங்கள் என நாம் நிறைய சமூக வலைதளங்களில் பார்த்தோம். இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தின் இசையில் அந்த கண்ண பாத்தாக்கா என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா மிகவும் சிம்பிளாக மார்ச் 15ம் தேதி பெரிய ஹோட்டலில் நடந்தது. ரசிகர்கள் மாஸ்டர் ரிலீஸுக்காக ஆவலாக வெயிட்டிங். இந்த நிலையில் விஜய்யின் மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழா மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. வரும் சனி மற்றும் ஞாயிறு காலை 11 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *