பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஈழத்து பெண் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தமிழ் சினிமாவின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தற்போது தமிழ் சினிமாவின் இளம் நடிகையாகி விட்டார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் ஆரியுடன் ஒரு படத்தில் கமிட் ஆனார்.

அந்த படத்தை தொடர்ந்து, லொஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்க், ஆக்ஷன் கிங் அர்ஜுன் இணைந்து நடிக்கும் படம் ஃப்ரெண்ஷிப். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட 60% சதவீதம் முடிந்து விட்ட நிலையில் மேலும் ஒரு பட வாய்ப்பு இவரை வந்தடைந்தது. ஆம் நடிகை லாஸ்லியா இதுவரை மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
பிக் பாஸ் புகழ் லாஸ்லியா இப்போது ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கிறார் என்று கூறலாம். ஏனெனில் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து புது வித கெட்டப்பில் போட்டோ ஷுட்கள் எடுத்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார். இந்த நிலையில் லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார். அந்த வீடியோ இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.