பிரபல தொகுப்பாளினி பிரியங்கா வீட்டில் நடந்த திருமணம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ

தனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த தொகுப்பாளினி தான் பிரியங்கா. ஒல்லி பெல்லி நிகழ்ச்சியின் போட்டியாளராக பங்கேற்றவர் பிரியங்கா. தொகுப்பாளினி என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு முதலில் நியாபகம் வருவது டிடி தான். இவருக்கு அடுத்த படியாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. பிரியங்கா எவ்வளவு தான் தன்னை கலாய்த்தாலும் அதையும் இவரே காமெடியாக்கி நிகழ்ச்சியை கொண்டு செல்வார்.

பிரியங்கா, மாகாபாவுடன் இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா. நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதில், வல்லவரானவர் பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் என பல பிரபல நிகச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.

பிரபல தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் போது எடுக்கப்பட்ட அழகிய குறும்பான காணொளிகளை அவர் யூட்டிப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிரியங்காவுக்கு இவ்வளவு பெரிய தம்பி இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டுள்ளனர். அது மாத்திரம் இல்லை, தொகுப்பாளினி பிரியங்காவின் தம்பிக்கு திருமண வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.