பிரபல தொகுப்பாளினி பிரியங்கா கர்ப்பமாக இருக்கிறார்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்….

தனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த தொகுப்பாளினி தான் பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் என பல பிரபல நிகச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.பிரியங்கா தேஷ்பாண்டே ஜீ தமிழில் தொகுப்பாளராகத் தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் அவர் சன் நெட்வொர்க்கிற்குச் சென்று சன் மியூசிக் விஜே. மேலும் அவர் சுட்டி டிவியில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். பின்னர் அவர் தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான விஜய் தொலைக்காட்சிக்குச் சென்று இன்றுவரை பணியாற்றினார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விஜே பிரியங்காவும் வீட்டில் இருந்து வருகிறார். பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகின்றது. விஜே பிரியங்கா, பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வெற்றிகரமாக வலம் வருகிறார்.

தற்போது லாக்டவுன் காலத்தில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தாலும் பிரியங்கா ஒரு யூட்டிப் சனல் ஒன்றை ஆரம்பித்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தொகுப்பாளினி பிரியங்கா கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. இந்த லாக்டவுனில், கியூட் கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.