பிரபல தொகுப்பாளினி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறாரா? வெளியான தகவலால் குஷியில் ரசிகர்கள்!!

தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். கடந்த மூன்று சீசன்களை போல் இந்த சீசனும் கமல் தான் தொகுப்பாளராக உள்ளார். பிக்பாஸ் சீசன் 4 தமிழ் எப்பொழுது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அண்மையில் ஸ்டைலிஷான லுக்கில் கமல் ஹாசன் எண்ட்ரி கொடுக்க சூப்பராக இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியானது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, செப்டம்பர் 27 அல்லது அதாவது 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், திங்கள் கிழமை முதல் பிக்பாஸ் வீட்டின் நிகழ்வுகள் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது. இறுதி நேரத்தில் இரு போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் கசிந்த நிலையில் உடனடியாக பிரபல தொகுப்பாளி ஒருவரை விஜய் டிவி களமிறக்கி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வரும் அர்ச்சனா தான் லேட்டஸ்ட்டாக பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் இணைந்துள்ள அந்த பிரபலம். விஜேவாகவும் நடிகையாகவும் நடித்துள்ள அர்ச்சனா நிகழ்ச்சிக்கு வந்தால், பிக் பாஸ் வீடு கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, அர்ச்சனாவுக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *