பிரபல தொகுப்பாளினி தமிழ் பிக்பாஸ் சீசன் 4 பங்கேற்பது சந்தேகம் தான்.. கடைசி நேரத்தில் வந்த சிக்கல்!

விஜய் தொலைக்காட்சியின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். உலகநாயகன் தொகுத்து வழங்க இந்நிகஸ்க்ச்சியின் மூன்றும் சீன்களும் வெற்றிகரமாக ஓடியது. பிக் பாஸ் சீசன் 4 நாளை தொடங்கவுள்ளது. பிக்பாஸில் பங்கேற்க போகும் போட்டியாளர்களின் ஃபைனல் லிஸ்ட் என ஒரு பட்டியல் இணையத்தில் வலைய வருகிறது. அதன்படி சனம் ஷெட்டி, கேப்ரில்லா, ரேகா, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், விஜே அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, பாடகர் அஜித், பாடகர் வேல்முருகன், பாலாஜி முருகதாஸ், சுரேஷ், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனுமோகன், மாடல் சோம்சேகர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் மேடையில் பர்ஃபார்மன்ஸ் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கான படப்பிடிப்பு கடந்த திங்கள் கிழமை நடைபெற்றதாகவும் இதில் சில பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. இதில் பர்ஃபார்மன்ஸ் செய்ய காத்திருந்த பிரபல விஜேவான அர்ச்சனாவுக்கு அவர் பணிபுரியும் தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து அழுத்தம் தரப்பட்டதாகவும், இதனால் பெரிய பஞ்சாயத்து நடைபெற்று கடைசியில் அவர் பர்ஃபாமன்ஸ் செய்யாமல், நிறுவனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடைசி நேரத்தில் ஏற்பட்ட சிக்கலால் விஜே அர்ச்சனா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது கேள்விக் குறியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. வேலையே வேண்டாம் என உதறிவிட்டு பிக்பாஸுக்கு வருவாரா அல்லது அதுதான் முக்கியம் என பிக்பாஸை கைவிடுவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.