பிரபல தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி காலமானார்.. வருத்தத்தில் திரையுலகினர்!

ஆறு, உத்தமபுத்திரன் போன்ற படங்களிலும் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி. வில்லன் மற்றும் நகைச்சுவை வேடங்களில் பெயர் பெற்றவர். தெலுங்கு சினிமாவில் பிரம்மா புத்ரா, சமரசிம்ஹ ரெட்டி, நரசிம்ம நாயுடு, சென்னகேசவா ரெட்டி போன்ற பல்வேறு படங்களிலும் பல கதாபாத்திரத்தில் மற்றும் கன்னடத்தில் ஸ்வேத நகரா, சிட்டிசன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்தவர் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி. தெலுங்கு நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆந்திராவின் குண்டூரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். ஜெயபிரகாஷ் ரெட்டி அவர்களுக்கு 74 வயது தான் ஆகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் வெளியான மகேஷ் பாபு நடித்த சரிலேரு நீகேவரு படத்தில் ஜெயபிரகாஷ் ரெட்டி கடைசியாக நடித்தார்.

இவரின் மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஜெயபிரகாஷ் ரெட்டி மறைவுக்கு நடிகர் மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தெலுங்கி தேச கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஜெயபிரகாஷ் ரெட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.