பிரபல திரைப்பட நடிகை ஜாங்கிரி மதுமிதாவிற்கு திருமணம் முடிந்தது- இவரின் தந்தை யாரு தெரியுமா….?

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தின் பல காமெடிகளில் ஜாங்கிரி காமெடியும் ஹிட். அந்த சீன் மூலம் தமிழ் சினிமாவில் வலம் வர ஆரம்பித்தவர் மதுமிதா.

அந்த காமெடி மூலமே அவருக்கு ஜாங்கிரி மதுமிதா என்ற பெயரும் வந்துவிட்டது. கடைசியாக இவர் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார்.  தற்போது 35 வயதை கடந்த நிலையில் இவருடைய திருமணம் பிப்ரவரி, 15ம் தேதி, சென்னை, கோயம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் குறும்பட இயக்குநரான தனது தாய்மாமன் மகன் மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்யபோவதாக தகவல்கள் வெளியாகின

அதன்படி இன்று பெரியோர்கள் முன்னிலையில் மதுமிதா மற்றும் மோசஸ் ஜோயலின் திருமணம் முடிந்துள்ளது. மதுமிதாவின் தந்தை வண்ணை கோவிந்தன் அ.தி.மு.க பேச்சாளராக இருந்தவர்.

இவர்களுடைய திருமணத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார்.  வைரலாகும் அவர்களது திருமண புகைப்படம் இதோ

 

 

Leave a Reply

Your email address will not be published.