தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பலர் உள்ளனர். இப்பொழுது வரும் படங்களில் ஹீரோ மற்றும் வில்லன் என இருவருக்கும் கதைகளில் முக்கியத்துவம் கொடுக்க பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வந்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன. தனி ஒருவன், விக்ரம் வேத, என்னை அறிந்தால் இப்படங்கள் அனைத்தும் ஹீரோ மற்றும் வில்லன் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளாகும்.
அனில் முரளி மலையாள சினிமாவில் இந்திய திரைப்பட நடிகராக இருந்தார். 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பின்னர் கேரக்டர் வேடங்களில் நடிப்பதற்கு முன்பு வில்லனாக திரைத்துறையில் தொடங்கினார். நடிகர் அணில் முரளி மலையாள திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தமிழில்ஆறு, நிமிர்ந்து நில், தனி ஒருவன், கணிதன், அப்பா, கொடி, எங்க அம்மா ராணி, தொண்டன், நாகேஷ் திரையரங்கம், ஜிஐவி போன்ற பல திரைப்படங்களில் வில்லனாக நடித்திருந்தார். கடைசியாக சசிகுமாரின் நாடோடிகள் 2, சிபிராஜின் வால்டர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் அணில் முரளி இன்று மரணமடைந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பல மலையாள நடிகர்களும் தங்களின் இரங்கலை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.