பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆலியா. அதே சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. லாக்டவுனில் ஆலியாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அவ்வப்போது தங்களது குழந்தையின் புகைப்படம், வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

ஆலியா சிறுது காலம் சினிமாவில் நடிக்காமல் இடைவெளி விட்டிருந்தார். திருமணத்துக்கு பிறகு சஞ்சீவ் கார்த்திக் ‘காற்றின் மொழி’ சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்தார். நடிகை ஆலியா மானசா குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். மிக விரைவாக உடல் எடையை குறைத்து ஒல்லியாக ஆகிவிட்டார்.
ஆல்யா மானசா நடிப்பில் ராஜா ராணி 2 சீரியல் உருவாக இருக்கிறது. அதற்கான புதிய புரொமோ அண்மையில் வெளியானது. இந்நிலையில் சினிஉலகம் சேனலுக்கு வந்த ஆலியா மற்றும் சஞ்சீவ் பல உண்மைகளை உடைத்ததோடு, மிகவும் அழகாக விளையாடியும் உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய ஷோபனாயும் டாஸ்க் என்ற பெயரில் வைச்சி செய்துள்ளனர்.