பிரபல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு திருமணம் முடிஞ்சாச்சு! வெளியான திருமண புகைப்படம்..

கொரோனா தொற்று காரணமாக உலகெங்கும் லாக்டவுன் போடப்பட்டது. பிரபலங்கள் பலரும் அவர்களது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். லாக்டவுன் நேரத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்க ஆரம்பித்துள்ளனர். படங்களுக்காக பிஸியாக இருந்த சினிமா பிரபலங்களுக்கு இது பொன்னான காலம் என்றே கூறலாம்.

பலருக்கு இந்த லாக் டவுனில் திருமணம் நெருங்கிய உறவினர்கள் மட்டும் சூழ நடக்கிறது, சிலருக்கு குழந்தை பிறந்துள்ளது. அப்படி தான் பிரபலங்களின் திருமணமும் நடக்கிறது. அதுவும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் பல பிரபலங்களுக்கு சத்தமே இல்லாமல் திருமணம் நடக்கின்றது. பிரபலங்களின் அந்த சந்தோஷ செய்தியையும் நாம் பார்த்து தான் வருகிறோம். அப்படி தான் பிரபல சீரியல் நடிகை ஸ்வேதாவிற்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நடிகை ஸ்வேதா விஜய் தொலைக்காட்சியின் கானா காணும் காலங்கள் கல்லூரியின் கதை மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் வள்ளி, சின்ன தம்பி, அபூர்வ சகோதரர்கள் போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார். அண்மையில் அவருக்கு நிச்சயதார்த்தம் நடக்க உடனே திருமணமும் நடந்துள்ளது. நடிகை ஸ்வேதா, அருண் என்பவரை தான் திருமணம் செய்துள்ளாராம். இதோ அந்த அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்…

 

 

View this post on Instagram

 

♥️Mr & Mrs♥️Finally? Arun ? Swetha♥️ #swearwedding ?05.09.2020? Thank you God for everything ?♥️ #familygetsbigger

A post shared by Swetha Subramanian (@swetha_subramanian92) on

Leave a Reply

Your email address will not be published.