பிரபல சீரியல் நடிகை ஸ்வேதாவுக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பது போலவே சீரியல் நடிகர்களுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். திரைப்பட கலைஞர்களை தாண்டி மக்களுக்கு அதிகம் நியாபகம் இருப்பது சீரியல் நடிகர்களை தான். ஏனென்றால் தினசரி அவர்களை மக்கள் பார்ப்பதால் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறார்கள். தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே சிலரை மக்களை நினைத்துவிடுகிறார்கள். சினிமாத்துறை தொழில் நுட்ப ரீதியாக பெரும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

அதிலும் சின்னத்திரை சீரியல்கள் சினிமாவுக்கு இணையாக ஜொலித்து வருகிறது. அவை மக்களை அதிகம் கவர்வதன் ரகசியம் இதுவென்றே கூறலாம். சின்னத்திரையில் சீரியல்களில் நடிப்பவர்களுக்கும் மக்களிடத்தில் நல் ஆதரவு கிடைத்து பிரபலமாகி விடுகிறார்கள். அதிகம் வரவேற்பை பெற்ற சீரியல்களில் சின்னத்தம்பி சீரியலும் ஒன்று. இதில் நடித்தவர் ஸ்வேதா வெங்கட். இவர் தாமரை, பொன்மகள் வந்தாள் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கவன், விருத்தாச்சலம், தப்பு தண்ட போன்ற படங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஸ்வேதா வெங்கட். கடந்த 2019 ஜனவரியில் ஸ்வேதா திருமணம் செய்து கொண்டார். ஓராண்டாகிவிட்ட நிலையில் ஸ்வேதாவுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளதை பகிர்ந்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by swetha Venkat (@swethavenkat.v)

Leave a Reply

Your email address will not be published.