தற்போது தொலைக்காட்சி தொடர்கள் மக்களிடம் நல்ல வரவேற்பெய் பெற்று வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரும் தொலைக்காட்சி தொடர்களை தான் பார்க்க ஆரம்பித்துவிட்டனர் என்று சொல்லலாம்,. பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மதியம் ஒளிபரப்பாகும் சீரியல் தேன்மொழி. இந்த சீரியலில் கொஞ்சம் காமெடி கலந்து போவதால் இந்த சீரியல் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த சீரியலில் தொகுப்பாளினி ஜாக்லின் நாயகியாக நடிக்கிறார். இவருடைய தங்கையாக நடிகை அஞ்சலி நடித்து இருந்தார். தற்போது வேறுஒருவர் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் ஒரு சீரியலில் எனது கதாபாத்திரம் காதல் பாதையில் செல்ல இருந்தது. ஆனால் அதற்கு என் முகம் சரியாக பொருந்தவில்லை என்று சொன்னதால் நானும் விலகி விட்டேன்.
தற்போது நான் காதலித்தவரையே திருமணம் செய்துகொண்டேன். எனது வீட்டில் காதலுக்கு அனுமதி இல்லை. அதனால் என்னுடைய காதலர் பிரபாவின் அப்பா-அம்மா சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டும் என கூறினார். தற்போது இந்த இளைய காதல் ஜோடியின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.