பிரபல சீரியல் நடிகருக்கு நடந்த திடீர் திருமணம்! வைரலாகும் புகைப்படங்கள்- குவியும் வாழ்த்துக்கள்!!

தமிழில் பிரபல டிவியில் ‘நந்தினி’ சீரியலில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானார் ராகுல். இத்தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ராகுல், அதைத்தொடர்ந்து பாட்ஷா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் ‘சாக்லேட்’ தொடரிலும் நாயகனாக நடித்தார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ராகுல் மாடலிங் துறையிலிருந்து திரைத்துறையில் 2013ம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். மலையாளத்தின் முன்னணி நடிகர்களான ஃபகத் பாசில், துல்கர் சல்மான் ஆகியோரது படங்களில் நடித்திருக்கிறார்.

பொன்னம்பிளி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ராகுல். கொரோனா லாக்டவுனுக்கு பின்னர் இத்தொடர் சில காரணங்களால் நிறுத்தப்பட்டதாக பிரபல ரிவி அறிவித்த பின்பு, தற்போது ‘கண்ணான கண்ணே’ சீரியலில் யுவா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்று வருகின்றார். சீரியல் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் ராகுல் கவனம் செலுத்தி வருகின்றார்.

சமீபத்தில் மாடலிங் துறையைச் சேர்ந்த லக்‌ஷ்மி நாயரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சோஷியல் மீடியாவில் தெரிவித்திருந்த ராகுலுக்கு நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. நடிகர் ராகுலின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Tamizh Serials (@tamil_serials_)

Leave a Reply

Your email address will not be published.