பிரபல சீரியலில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் சூரி.. எந்த சீரியலில் தெரியுமா? புகைப்படம் இதோ

நடிகர் நாகேஷில் தொடங்கி இன்று காமெடியில் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கும் யோகி பாபு வரை மக்கில் மனதில் எளிதில் இடம் பிடிதிடவில்லை. இந்த காமெடி நடிகர்கள் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் காமெடியில் கலக்கி பெரும் புகழடைந்தவர்கள். எளிதில் இந்த இடத்தினை மக்கள் அவர்களுக்கு தரவில்லை என்பது மட்டும் உறுதி, இப்படிகடந்த சில வருடங்களாகவே காமெடியில் கலக்கிக்கொண்டு இருப்பவர் நடிகர் சூரி.

இவர் ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் புகழடைந்து பரோட்டா சூரி என இன்றுவரை ரசிகர்களின் மத்தியில் நினைவு கூரபடுகிறார். இந்த வெற்றிக்கு பின்னர் பல திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவே அணைத்து படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறார்.  நடிகர் சூரியும் இப்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார்.

சினிமாவை தாண்டி சொந்தமாக ஹோட்டல்கள் திறந்துள்ளார், அதன் திறப்பு விழாவிற்கு எல்லாம் நடிகர் சிவகார்த்திகேயன் வந்துள்ளார். முன்னணி காமெடி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்திருக்கும் சூரி ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்துள்ளார்.ஆம் அவர் படு சூப்பர் ஹிட்டான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியலில் அவர் நடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *