பிரபல சீரியலான ராஜா ராணியில் வில்லியாக நடித்த நடிகையின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

‘ராஜா ராணி’ சீரியலில் வில்லியாக நடித்து நடிகை ஶ்ரீதேவி அதிக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். 2008-ல் சீரியலுக்கு வந்த அவர், 2 தெலுங்கு சீரியல்களில் நடித்து முடித்த பிறகு, ‘செல்லமடி நீ எனக்கு’ சீரியலின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி, ராஜா ராணி, கல்யாண பரிசு உள்ளிட்ட தொடர்களில் பாஸிட்டாவாகவும், நெகட்டிவாகவும் நடித்துள்ளார்.

ஸ்ரீதேவி நடித்த நெகட்டிவ் ரோல்கள் தான் இதுவரை ரசிகர்களிடம் அவரை அடையாளப்படுத்தியுள்ளது. நடிப்பு மட்டும் அல்ல இவர் படிப்பிலும் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். எம்.எஸ்.சி கிரிமினாலஜி படித்திருக்கிறார். நிறைய கேரக்டர்களில் நடித்திருந்தாலும், ‘தங்கம்’ சீரியலின் ரமா என்கிற கேரக்டர்தான் ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்ததாம். அதற்குப் பிறகு `கல்யாணப் பரிசு’ சீரியல் ஸ்ரீதேவியின் மனதுக்கு நெருக்கமான சீரியலாம்.

சி.ஐ.டி-யாக வேண்டும் என்பது தான் ஸ்ரீதேவியின் பெரிய லட்சியமாம். அதோடு செல்லப் பிராணிகளை பாதுகாக்கும் துறையிலும் பணியாற்றி வருகிறார். அப்படி அனிமல் ரெஸ்கியூ டீமில் இருந்த அசோக் என்பவரை காதலித்து திருமணமும் செய்துக் கொண்டார். இந்நிலையில் கொரோனா நேரத்தில் ரசிகர்களுக்காக அழகு குறிப்புகள் கொடுத்துள்ளார். குறித்த காணொளியை நீங்களே முழுமையாக பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.